பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ் காட்டும் விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

  • May 29, 2023 / 02:00 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பிச்சைக்காரன் 2’ கடந்த மே 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்ததுடன், அவரே இப்படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் காவ்யா தபார், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.30.80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus