அடேங்கப்பா… விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

  • May 20, 2023 / 12:35 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பிச்சைக்காரன் 2’ நேற்று (மே 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்ததுடன், அவரே இப்படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் காவ்யா தபார், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, உலக அளவில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.8.15 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus