சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘பிச்சைக்காரன் 2’ கடந்த மே 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்ததுடன், அவரே இப்படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் காவ்யா தபார், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஸ்டார் இந்தியா’ நிறுவனம் (சேட்டிலைட் – விஜய் டிவி, டிஜிட்டல் – டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்) ரூ.15 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.