விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • April 29, 2023 / 01:04 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிப்பதுடன், அவரே இப்படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் காவ்யா தபார், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்தனர். தற்போது, இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற மே 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus