விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • October 7, 2023 / 04:09 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், காக்கி, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரோமியோ, ஹிட்லர்’ என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ரத்தம்’ படம் நேற்று (அக்டோபர் 6-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.

இதற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.46 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus