தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது.
விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.
இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. படம் வருகிற தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸாகுமாம். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 19-ஆம் தேதி) தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், விஜய் தன்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
Thalaivaaaa 🙏🙏🙏#Beast @actorvijay @ActorVijayFP#TnLocalBodyElections pic.twitter.com/OdLlOmvNWW
— Thalapathy Vijay Videos (@ThalapathyVideo) February 19, 2022