Theri & Baby John : ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் ‘தெறி’… வெளியானது ‘பேபி ஜான்’ படத்தின் மாஸான டீசர்!

  • February 5, 2024 / 03:47 PM IST

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தெறி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லீ இதனை இயக்கியிருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் இயக்குநர் மகேந்திரன், எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், பேபி நைநிகா, மொட்ட ராஜேந்திரன், பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படம் ஹிந்தியில் ரீமேக்காகி வருகிறது. இயக்குநர் அட்லீயே தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார்.

இதனை ஜீவாவின் ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்குகிறார். இதில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று இப்படத்திற்கு ‘பேபி ஜான்’ என டைட்டில் வைத்துள்ளதாக அறிவித்ததுடன், இதன் டீசரையும் ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற மே 31-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus