தனது பெற்றோரின் 50-வது திருமண நாள்… அம்மா ஷோபாவுடன் விஜய் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்!
April 26, 2023 / 10:36 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், நடிகர் விஜய்-க்கு டோலிவுட்டில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கோபிசந்த் மலினேனி சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். விஜய்யின் கேரியரில் 68-வது படமான இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், விஜய் தனது பெற்றோரின் 50-வது திருமண நாளை முன்னிட்டு அம்மா ஷோபா சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் ஸ்டில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus