தனது பெயரைக் கெடுக்க வேண்டும் என தெலுங்கில் சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவதாக விஜய் தேவாரகொண்டா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் விதமாக அனைத்து மொழி கலைஞர்களும், நிதி திரட்டி உதவி செய்து வருகின்றனர். இதேபோல உச்ச நட்சத்திரங்கள் முதற்கொண்டு பலரும் உதவி செய்து வரும் நிலையில், முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவாரகொண்டா 1.30 கோடி ரூபாய் நிதியாக அளித்தார்.
மேலும் தனது அறக்கட்டளை மூலமாக தனக்கு உதவி வேண்டுவோர் தொடர்புக்கொள்ளலாம் என அவர் அறிவித்து இருந்தார். ஆனால் அந்த அறக்கட்டளை குறித்தும், அவர் நிதி கொடுக்கவில்லை என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அதிருப்தியடைந்த விஜய், ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டு ‘அதில் எனது புகழைக் கெடுப்பதற்காக இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல தமிழில் ராதிகாவும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.