விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

  • September 5, 2023 / 06:01 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘குஷி’ கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியுள்ளார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெயராம், சச்சின் கெடேகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.65.05 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus