விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • October 25, 2023 / 12:21 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் ஹீரோவாக நடித்த ‘குஷி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியிருந்தார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெயராம், சச்சின் கெடேகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.80.25 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus