விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

  • August 31, 2023 / 03:16 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘குஷி’. இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியுள்ளார்.

இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெயராம், சச்சின் கெடேகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை நாளை (செப்டம்பர் 1-ஆம் தேதி) தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படம் உலக அளவில் ரூ.53.50 கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus