தற்கொலை செய்த கொண்ட ரசிகர்… குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன விஜய்!
August 15, 2020 / 06:42 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகரான பாலா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் “தலைவன் படம் பார்க்காமலே போறேன்.. தலைவனையும்.. லவ் யூ தலைவா விஜய்” என்று பதிவிட்டிருந்தார். பாலா கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார் என்பது அவரது சில ட்விட்டர் பதிவுகளில் இருந்தே தெரிகிறது. இந்த தகவலை தெரிந்து கொண்ட நடிகர் விஜய், பாலாவின் குடும்பத்தினருக்கு போன் செய்து ஆறுதல் சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது.