யார் அதிகமாக நிதி கொடுத்து என்ற சண்டையில் விஜய் ரசிகர் கொலை செய்யப்பட்டதால், சமூக வலைதளத்தில் அதிகளவில் ரஜினி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
உச்சநட்சத்திரமாக கருதப்படும் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சம் ஆரம்பத்திலேயே அளித்த நிலையில், அதிகமாக நிதி தந்தவர் ரஜினியா விஜய்யா என்கிற விவாதத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர். இதுவரை சுமார் 2 லட்சத்திற்கு மேலானோர் பலியான நிலையில், இந்திாயவில் மட்டும் 23,500 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் திரை நட்சத்திரங்கள் கொரோனா நிதியை அளித்து வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான யுவராஜ் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இவருக்கும் ரஜினியின் ரசிகரான தினேஷுக்கும் ரஜினி, விஜய் ஆகிய இருவரில் கொரோனா நிவாரண நிதியை யார் அதிகமாகத் அளித்தது என்ற வாக்குவாதம் சண்டையாக மாறியது. இந்த சண்டையில் ரஜினி ரசிகரால் விஜய் ரசிகர் யுவராஜ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து தினேஷ் பாபு மீது மரக்காணம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். விசாரணையில் சண்டையின் போது இருவரும் மது அருந்தி இருந்ததால் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விஜய் ரசிகர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் பெரும் போராக வெடித்துள்ளது. ரஜினி 50 லட்சம் மற்றும் நலிந்த கலைஞர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அளித்து வரும் நிலையில், விஜய் சுமார் 3 கோடி ரூபாய் வரை நிதியளித்துள்ளார். இந்நிலையில், விஜய் ரசிகர்கள் அனைவரும் ரஜினியை சமூகவலைதளத்தில் தற்போது ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு பதிலாக ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களை ட்ரோல் செய்து வருகின்றனர். ட்ரோல் செய்வது மட்டுமல்லாமல் பலவிதமான வார்த்தை அபிஷேகங்களையும் இருதரப்பினரும் பரிமாறிக்கொண்டு வருகின்றனர். இரு நடிகர்களும் தங்களின் ரசிகர்களை அடக்கவில்லை என்றால் இந்த வார்த்தை போர் மற்றொரு ஒரு கொலையில் முடியவும் வாய்ப்புள்ளது.