நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்நிலையில் வாரிசு படத்தின் ஐந்தாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து முடிந்தது .
தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது . இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வரும் சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தின் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் நடித்துள்ளார் . சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சரத்குமார் நடிகர் விஜய்க்கு பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பாடல் பொன்னி நதி பாடல் மிகவும் பிடிக்கும் என்றும் அதை அடிக்கடி ஹம்மிங் செய்வார் என்றும் கூறியுள்ளார் .