நெல்சன் படத்துக்காக ஜார்ஜியா செல்லும் விஜய்… தீயாய் பரவும் வீடியோ!

  • April 7, 2021 / 10:53 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்க உள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்த படத்தில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது பூஜா ஹெக்டே. இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்தது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி இப்படத்துக்கான பூஜை போடப்பட்டது. இந்நிலையில், இப்படக்குழுவினர் இதன் ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியாவுக்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. ஜார்ஜியாவுக்கு செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்ற விஜய்யின் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

1

2

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus