தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்டோர் பட்டியலில் விஜய் முதலிடம்!
July 20, 2020 / 02:54 PM IST
|Follow Us
நாடு முழுவதும் கொரோனா காரணமாக லாக்டோன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இந்நிலையில் பொழுதுபோக்கு என்றால் அது தொலைக்காட்சியும் இணையதளமும்தான்.
தற்போது சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்ட சினிமா பிரபலங்களின் படங்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் படங்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டது என்றும், அவரை அடுத்து நடிகர் லாரன்ஸின் படங்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டது என்றும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் உள்ள முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது ப்ரைம் டைமில் பெரிய நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள். இந்நிலையில் இந்த நிறுவனங்கள் தற்போது அதிகம் பார்க்கப்பட்ட நட்சத்திர நடிகர்களின் படங்கள் பட்டியல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
இதில் நடிகர் விஜய்யின் படங்கள் 177.9 மில்லியன் இம்பிரஷன்ஸ்களையும், இரண்டாவது இடத்தில் நடிகர் லாரன்ஸின் திரைப்படங்கள் 76.2 மில்லியன் இம்பிரஷன்ஸ்களையும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் பிரபாஸ் ஆகியோரின் படங்களும் கருத்துக்கணிப்பில் முன்னணியில் இருக்கிறார்கள்.
இந்த செய்தி வெளியானது முதலே நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் இணையதளத்தில் அவரது இந்த பிரம்மாண்ட வெற்றியை பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்திருக்கிறார். லாக்டோன் முடிந்ததும் இந்த படம் வெளியிடப்படும் என்று திரைப்பட குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.