அடுத்த முதலமைச்சர் இந்த வாரிசு தான் !

  • January 9, 2023 / 11:02 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . வருகின்ற 11 -ஆம் தேதி தமிழில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்து இருந்தது . நடிகர் அஜித்தின் துணிவு படமும் தமிழில் 11 ஆம் ஆம் தேதி வெளியாக உள்ளது . இதனால் இரண்டு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் .

இந்நிலையில் மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் தற்போது ஒட்டி உள்ள போஸ்டர்கள் மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது . அந்த போஸ்டரில் நடிகர் விஜய் புரட்சி தலைவர் எம் .ஜி.ஆர் அவர்கள் மாதிரி தொப்பி அணிந்து உள்ளார் , மேலும் 2026 – விஜய் தான் முதலமைச்சர் என்றும் போடப்பட்டுள்ளது .

இதை பார்த்து பலரும் கலாய்த்து வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus