பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரான தில் ராஜு, விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் மூலம் கோலிவுட்டில் படம் தயாரித்துள்ளார் . மேலும் அவர் சமீபத்தில் விஜய்யை தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் எனக் கூறிய அவர், ட்ரோல்களை எதிர்கொண்டார். ஒரு ஹீரோவின் நட்சத்திர மதிப்பு திரையரங்கு வருவாயைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது என்று தில் ராஜு சமீபத்தில் ஒரு ஊடக உரையாடலில் விளக்கினார்.
படத்தின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் விஜய்யின் கடைசி ஐந்து படங்களும் தமிழ்நாட்டில் 60 கோடி ரூபாய்க்கு ஷேர் செய்துள்ளன. எனவே, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் விட விஜய்யை பெரிய நட்சத்திரம் என்று அழைக்கும் அவர், அஜித்தின் ‘துணிவு’ படத்தை விட ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரைகளைக் கோருவதற்கான காரணம் என்றும் குறிப்பிட்டார். இதனால் அவர் மீண்டும் ட்ரோல்களை எதிர்கொள்கிறார்.
இந்த பொங்கலுக்கு விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், இரண்டு பாக்ஸ் ஆபிஸ் போட்டியாளர்களும் 8 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகிறார்கள். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது . இதற்கிடையில், தமிழ்நாட்டின் திரையரங்குகள் சங்கம் சலசலப்பை தவிர்க்க ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கு சமமான திரைகளை வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .