Fight Club : விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • January 19, 2024 / 11:06 AM IST

தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் ‘மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கினார்.

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘G SQUAD’ என்ற பெயரில் துவங்கியிருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்த முதல் படம் ‘ஃபைட் கிளப்’. இதில் ஹீரோவாக ‘உறியடி’ புகழ் விஜய் குமார் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம் ஷங்கர் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குநர் அப்பாஸ்.ஏ.ரஹ்மத் இயக்கியுள்ளார். இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார், கிருபாகரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படத்தை வருகிற ஜனவரி 27-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus