விஜய் – த்ரிஷா ஜோடியாக நடிக்கும் ‘லியோ’… சென்னை ஷெட்யூலுக்கு நாள் குறித்த லோகேஷ் கனகராஜ்!

  • March 28, 2023 / 11:07 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், இந்த படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

தற்போது, இதன் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் நாளை (மார்ச் 29-ஆம் தேதி) முதல் சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் ஆரம்பமாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஷெட்யூலில் தொடர்ந்து 17 நாட்களுக்கு அங்கு ஷூட்டிங் நடைபெறுமாம். படத்தை இந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus