தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இப்படம் கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸானது.
‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படமான ‘வாரிசு’வை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.
விஜய்-யின் 67-வது படத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதில் விஜய் கேங்ஸ்டராக வலம் வரப்போகிறாராம். மேலும், ஹீரோயினாக த்ரிஷாவும், முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில், இப்படத்துக்கான பூஜை போடப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜனவரி 2-ஆம் தேதி) முதல் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.