வேற லெவல் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய் !

  • December 24, 2022 / 07:07 PM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வம்ஷி இந்த படத்தை இயக்கி உள்ளார் .

நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்கு பெரிய அளவில் ஆடியோ லான்ச் நடக்கும் . இந்த விழாக்களில் நடிகர் விஜய் அரசியல் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தார் . குறிப்பாக சர்கார் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் சற்று தூக்கலாகவே அரசியல் பேசினார் . விஜய் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பங்கேற்று இருந்தார் . பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் நடக்கவில்லை .

மாஸ்டர் படத்திற்கு முன் வரை அரசியல் பேசி வந்த விஜய் மாஸ்டர் பட ஆடியோ லான்ச் விழாவில் அரசியல் பேசவில்லை . இதற்கு காரணம் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது இவர் வீட்டில் வருமான வரித் துறையினர் ஆய்வு நடத்தினர் . இதனால் நடிகர் விஜய் அந்த விழாவில் ” உண்மையா இருக்கனும் என்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்கனும் ” என்று பேசி நழுவிட்டார் .

இந்நிலையில் நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது வாரிசு பட ஆடியோ லான்ச் விழாவில் பேச உள்ளார் . இந்நிலையில் நடிகர் விஜய் நேரு உள்விளையாட்டு அரங்கில் அரங்கம் அதிர ரசிகர்களுக்கு கை அசைத்து என்ட்ரி ஆகி உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus