முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை இம்மாதம் (செப்டம்பர்) இறுதியில் லண்டனில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கமிட்டாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சஞ்சய் தத் விஜய்யின் ‘லியோ’வில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.