முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இந்த படம் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸானது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம். ‘துணிவு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில், அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கவிருக்கிறாராம். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் மும்பையில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ‘தளபதி’ விஜய்யின் ‘தெறி, கத்தி’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.