ஜூன் 22ம் தேதியா… மே 1ம் தேதியா..? தொடங்கியது ரசிகர்களின் போர்…!
April 21, 2020 / 01:12 PM IST
|Follow Us
தல ரசிகர்களுக்கும், தளபதி ரசிகர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான், நேரில் அடித்து கொண்டிருந்த அவர்கள் தற்போது சமூக வலைதளங்களில் அடித்து கொள்கின்றனர்.
ஜூன்22தமிழன்திருவிழா என்ற ஹேஷ்டாக்கும், மே1தலதிருவிழா என்ற ஹேஷ்டாக்கும் இன்று ட்விட்டர் தளத்தில் மோதிக் கொள்கின்றன. இதற்கு முக்கிய காரணம் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள், மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள். கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள், இரு நடிகர்களை அசிங்கப்படுத்தும் விதமாக ஹேஷ்டாக்கை பதிவிட்டு மோதிக்கொண்டு வருகின்றனர்.
அஜித் வரும் மே ஒன்றாம் தேதி தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், “மே 1 தல திருவிழா” என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர் மன்றத்தை களைத்த பின்னும் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது தான் அவரின் தனிப்பெரும் சக்தி. அவரை கிண்டல் செய்பவர்கள் குறித்து கண்டுகொள்ளாமல், தனக்கான பணிகளில் கவனம் செலுத்துவது தான் அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்க காரணம். வலிமை படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அஜித்திற்கு சமீபத்தில் அடிப்பட்டு விட்டதாக தகவல் வெளியானதும் சமூக வலைதளங்களே அல்லோலப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள். அவரின் பிறந்தநாள் அன்று வலிமையின் முதல் அப்டேட் வரும், அல்லது முதல் போஸ்டர் வெளியாகும் என அவரின் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ளனர். அதன் காரணமாகவே “மே 1 தல திருவிழா” என்று ஹேஷ்டாக்கை அஜித் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
சமூக வலைதளத்தின் சிங்கங்கள் என்றால் அது விஜய் ரசிகர்கள் தான். அதற்கு முக்கிய காரணம் அவர்களின் நெர்வெர்க், ஒரு டேக் அவர்களின் பவர் சென்டரிலிருந்து வெளியானதும், உடனடியாக படைத்தளபதிகள் அதனை ட்விட்டர் வீரர்களிடம் பகிர்ந்தளிப்பார்கள். உடனே வீரர்களின் அசாத்திய திறமையால் சில நொடிகளில் அந்த டேக் ட்விட்டர் டிரெண்டிங்கின் முதலிடத்தில் வரும். அப்படி வந்த டேக் தான் “ஜூன்22தமிழன்திருவிழா”. ஜூன் 22ம் தேதிதான், விஜய்யின் பிறந்தநாள், இந்நாளில் தான் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுவதால், இந்த டேக்கை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் சக்தியாலும், எண்ணிக்கையாலும் அஜித் டேக் தற்போது காணாமல் போய் விட்டது,… தற்போது டாப்பில் இருப்பது விஜய் டேக் தான்.
இந்த மோதலில், நடுவில் தனுஷ் ரசிகர்கள் தங்கள் நாயகனின் பிறந்தநாளுக்கு ஒரு டேக் செய்து நடுவில் அதனை பிரபலமாக்கி வருகின்றனர். விஜய் – அஜித் ரசிகர்களின் இந்த சண்டையால் பல திரை பிரபலங்களே கடுப்பாகி, அவர்களை எச்சரித்துள்ளனர். குஷ்பு, கஸ்தூரி, கருணாகரன், விவேக் என இந்த லிஸ்ட் நீள்கிறது. அட்வைஸ் செய்யும் பிரபலங்களையும் ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் பிரித்து மேய்வதால், பலரும் செய்வதறியாமல் டிவிட்டரை விட்டே வெளியேறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இவர்களின் சண்டையால் பல அத்தியாவசிய ஹேஷ்டாக்குகளும், பிரத்யேக ஹேஷ்டாக்குகளும் சாமானியர்களின் கண்களுக்கு படாமல் போய் விடுகிறது என்பது தான் நிதர்சன உண்மை.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.