வைரலாகும் விஜய்யின் பீஸ்ட் வசனம் !

  • April 13, 2022 / 02:30 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள படம் பீஸ்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது.

படம் வெளியீட்டுக்கு முன் இந்த படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள படத்தில் இந்தி மொழி குறித்த வசனம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

“உங்களுக்காக நான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது; தேவையென்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்“

என்ற வசனத்தை விஜய் பேசியுள்ளார்.

இந்த வசனத்தை சுட்டி காட்டி பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்பொழுது இந்த வசனம் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus