பூவே உனக்காக படத்திற்கு நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் !

  • July 27, 2022 / 09:59 AM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்நிலையில் நடிகர் விஜய்யின் 66 -வது படமான இந்த படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் பூவே உனக்காக .இந்த படம் நடிகர் விஜய்யின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் . இயக்குனர் விக்ரமன் இந்த படத்தை இயக்கி இருந்தார் . நடிகர் விஜய் இந்த படத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus