கெளதம் கார்த்திக்கு பதிலாக நடித்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • October 8, 2022 / 02:35 PM IST

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காதலும் கடந்து போகும்’. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நலன் குமரசாமி இதனை இயக்கியிருந்தார்.

இதில் விஜய் சேதுபதி ‘கதிரவன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், கிரண், மணிகண்டன், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் நலன் குமரசாமி கெளதம் கார்த்திக்கை அணுகினாராம். பின், சில காரணங்களால் கெளதம் கார்த்திக்கால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus