அனிருத்துக்கு பதிலாக நடித்த விஜய் சேதுபதி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நானும் ரௌடி தான்’. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இதனை இயக்கியிருந்தார்.

இதில் விஜய் சேதுபதி ‘பாண்டி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, அழகம் பெருமாள், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் விக்னேஷ் சிவனின் முதல் சாய்ஸாக இருந்தது இசையமைப்பாளர் அனிருத் தானாம். பின், சில காரணங்களால் அனிருத்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.