நடிகர் சூர்யாவுக்கு பதிலாக நடித்த விஜய் சேதுபதி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • October 4, 2022 / 09:51 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் ‘வணங்கான்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 3’ மற்றும் இயக்குநர் சிவா படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சிவா இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

2016-யில் ரிலீஸான தமிழ் படம் ‘காதலும் கடந்து போகும்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நலன் குமரசாமி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆனால், நலன் குமரசாமியின் முதல் சாய்ஸாக இருந்தது சூர்யா தானாம். பின், கால்ஷீட் பிரச்சனை காரணமாக சூர்யாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus