சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 14 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய ஹிந்தி படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ஹிந்தியில் ‘பத்லாபூர், அந்தாதுன்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்க உள்ளாராம்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாப்புலர் பாலிவுட் ஹீரோயின் கத்ரீனா கைஃப் நடிக்க உள்ளார். ஏற்கனவே, விஜய் சேதுபதி ‘மாநகரம்’ (தமிழ்) படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’ படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.