விஜய் சேதுபதி – ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிக்கும் படம்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 15 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் இயக்குநர் பொன்ராம் இயக்கும் படம் விஜய் சேதுபதியின் கேரியரில் 46-வது படம். இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு க்ரீத்தி நடிக்கிறார். மேலும், காமெடியில் கலக்க ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ஃபேமஸான புகழ் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட விஜய் சேதுபதி – புகழ் இடம்பெறும் காட்சியின் ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.