பிசாசு 2 படத்தின் புதிய அப்டேட் !

  • May 27, 2022 / 09:49 AM IST

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் பிசாசு . இந்த படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் மிஷ்கின் . இயக்குனர் பாலா இந்த படத்தை தயாரித்து இருந்தார் . ராதா ரவி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக அறிவித்தார் .நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள் . மேலும் நடிகை பூர்ணா , நடிகர் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளார் .கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் .

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . தற்பொழுது பிசாசு 2 படத்தின் டப்பிங்கை முழுவதுமாக விஜய் சேதுபதி முடித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்து இருந்தார் . எனவே மிஷ்கின் படத்தின் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus