மலையாள சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி !

  • November 23, 2022 / 11:53 PM IST

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி . தென்மேற்கு பருவக்காற்று என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் . அதற்கு முன்பாக பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் .

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .

இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இந்நிலையில் படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் விஜய் சேதுபதி கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் மணிகண்டன் அவர்களுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . மேலும் அந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அவர்களும் சேர்ந்து நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus