Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • January 10, 2024 / 11:14 AM IST

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள புதிய படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இதற்கு ப்ரீத்தம் இசையமைத்துள்ளார், மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பூஜா லதா சூர்தி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோவை பார்த்த சில திரையுலக பிரபலங்கள் ‘மெரி கிறிஸ்துமஸ் ‘ டீமை பாராட்டி எக்ஸ் தளத்தில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus