Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’… ட்ரெய்லர் விமர்சனம்!

  • December 20, 2023 / 06:08 PM IST

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகி வரும் புதிய படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இதற்கு ப்ரீத்தம் இசையமைக்கிறார், மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பூஜா லதா சூர்தி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இன்று இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus