Vijay Sethupathi & Mysskin : விஜய் சேதுபதி & மிஷ்கின் இணையும் படம்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

  • November 21, 2023 / 05:56 PM IST

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கவுள்ளார். இதனை ‘V கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார்.

இதற்கு மிஷ்கினே இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி சென்னையில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus