Train : மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’… வைரலாகும் பூஜை ஸ்டில்ஸ்
December 1, 2023 / 01:10 PM IST
|Follow Us
சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கவுள்ளார். இதனை ‘V கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இதற்கு மிஷ்கினே இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது.
தற்போது, ‘ட்ரெயின்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று (டிசம்பர் 1-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் மிக முக்கிய ரோல்களில் கணேஷ் வெங்கட்ராமன், செல்வா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.