தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ள புதிய படம் ‘ப்ளூ ஸ்டார்’ (Blue Star). இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை எஸ்.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இதில் அசோக் செல்வன் – ஷாந்தனு பாக்யராஜ் இணைந்து நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி பாண்டியன், ப்ரித்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார், தமிழ்.ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா.ஆர்.கே. படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் ப்ரித்விராஜன் தனது எக்ஸ் தளத்தில் “இந்த தம்பிக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் சேர்ந்து ‘ப்ளூ ஸ்டார்’ பார்த்ததற்கு நன்றி அண்ணா. படம் உங்களுக்கு பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் வீடு வந்து என்னையும், எங்களுடைய படக்குழுவையும் பாராட்டியதற்கு நன்றி” என்று பதிவிட்டதுடன் விஜய் சேதுபதியுடன் எடுத்த ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார்.
இந்த தம்பிக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் சேர்ந்து “ Bluestar” பார்த்ததற்கு நன்றி அண்ணா♥️♥️♥️.படம் உங்களுக்கு பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் வீடு வந்து என்னையும், எங்களுடைய படக்குழுவையும் பாராட்டியதற்கு நன்றி.
“Sam happy annachi!!” @VijaySethuOffl pic.twitter.com/A9RXf1svT9— Prithvi (@prithviactor) February 13, 2024