ஜோதிகாவுக்கு எதாவது ஆனால், நான்தான் முதலில் வந்து நிற்பேன் என ஜோதிகாவுக்கு உதவி கரம் நீட்டுவதாக விஜய் சேதுபதி கூறியதாக வரும் செய்தி உண்மையில்லை எனக்கூறப்படுகிறது.
பிரபல பத்திரிக்கையான JFWவின் விருது வழங்கும் விழா லாக்டவுனுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சிம்ரன், ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதை பெற்றுக்கொண்டனர். அப்போது பேசிய ஜோதிகா, தஞ்சை கோயிலுக்கு செய்வது போல மருத்துவமனைகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இருக்கும் சுத்தமற்ற பராமரிப்பை மாற்ற பணம் கொடுத்து உதவுங்கள்” என்று கூறி இருந்தார்.
ஆனால் சிலர் சமூகவலைதளத்தில் சர்ச்சையாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது. தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என ஜோதிகா கூறியதாக செய்தி பரவியது. இதனைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி ஜோதிகாவுக்கு ஆதரவான ஒரு ட்வீட்டை பதிவு செய்தது போன்ற போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் விஜய் சேதுபதி நான் அப்படி கூறவே இல்லை. யாரோ போலியாக இதை பரப்பி வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.