விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் நடித்துள்ள ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்

  • February 10, 2023 / 09:27 PM IST

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி பிரபல ஹிந்தி நடிகர் ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்த ‘ஃபார்ஸி’ என்ற வெப் சீரிஸ் இன்று (பிப்ரவரி 10-ஆம் தேதி) ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸாகியுள்ளது.

இவ்வெப் சீரிஸை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கியுள்ளனர். இதில் மிக முக்கிய ரோல்களில் கே கே மேனன், ராஷி கண்ணா, புவன் அரோரா, ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தற்போது, க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இவ்வெப் சீரிஸை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus