விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ்… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

  • January 15, 2023 / 09:22 AM IST

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி பிரபல ஹிந்தி நடிகர் ஷாஹித் கபூருடன் இணைந்து ‘ஃபார்ஸி’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இவ்வெப் சீரிஸை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கியுள்ளனர்.

இதில் மிக முக்கிய ரோல்களில் கே கே மேனன், ராஷி கண்ணா, புவன் அரோரா, ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வெப் சீரிஸ் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ஹிந்தி மற்றும் தமிழில் ரிலீஸாகுமாம்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags