சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் கேரியரில் மிக முக்கியமான படம் ’96’. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பிரேம் குமார் இதனை இயக்கியிருந்தார்.
இதில் விஜய் சேதுபதி ‘ராம்’ என்ற ரோலிலும், த்ரிஷா ‘ஜானு’ என்ற ரோலிலும் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்கள். மேலும், மிக முக்கிய ரோல்களில் பகவதி பெருமாள், ஜனகராஜ், தேவதர்ஷினி, கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
2018-ல் ரிலீஸான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்தை வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.