மீண்டும் மீண்டும் அந்த நடிகையுடன் நடிக்க ஆசைப்படும் விஜய் சேதுபதி!!

  • June 18, 2022 / 07:44 PM IST

விஜய்சேதுபதி நாயகனாக நடித்த இரண்டாவது படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் அவருக்கு ஜோடியாக சிறிய கேரக்டரில் நடித்தவர் காயத்ரி. அதன் பிறகு அவருடன் இணைந்து ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், விக்ரம் படங்களில் நடித்தார். விஜய்சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்தவர் காயத்ரி தான். இந்நிலையில் மாமனிதன் படத்தில் இருவரும் நடித்துள்ளனர்.
மாமனிதர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சேதுபதி இந்த படத்தில் எனது மனைவி சாவித்ரியாக காயத்ரி நடித்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதால் பலர் நடிக்க தயங்கிய கேரக்டரில் காயத்ரி துணிச்சலாக நடித்தார். அதுவும் மேக் போடாமல், உடல் எடையை கூட்டி நடித்தார். காயத்ரி அற்புதமான நடிகை அவரது திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. தொடர்ந்து அவர் தன் திறமைகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்வார். படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டால் அதற்கான நிறைய அர்பணிப்புடன செயல்படுவார், கடுமையாக உழைப்பார். அவருடன் நிறைய படங்களில் நடித்து விட்டேன். இன்னும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் அவருடன் நடிப்பேன் என்றார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus