விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’வை இயக்கும் நித்திலன்… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
September 10, 2023 / 08:33 PM IST
|Follow Us
சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கி வருகிறார். ‘மகாராஜா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அஜனீஷ் பி லோக்நாத் இசையமைத்து வருகிறார், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.