ஹாரர் காமெடி படமான ‘அனபெல் சேதுபதி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘அனபெல் சேதுபதி’ என்ற படத்தை அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இவர் பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அனபெல் சேதுபதி’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார்.

மேலும், ராதிகா, யோகி பாபு, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், சுப்பு பஞ்சு, சேத்தன், சுரேஷ் மேனன், தேவதர்ஷினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதாம். தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.