சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘DSP’ என்ற படம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பொன்ராம் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு க்ரீத்தி நடித்திருக்கிறார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘குக் வித் கோமாளி’ புகழ், ஷிவானி நாராயணன், இளவரசு, பிரபாகர், ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் இசையமைத்துள்ளார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.