” டி.எஸ்.பி ” படத்தின் ஓ.டி .டி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

  • December 26, 2022 / 11:09 AM IST

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .

இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருக்கும் அவரது 46 -வது படமான டி .எஸ் .பி படத்தை இயக்குனர் பொன் ராம் இயக்கி உஇருந்தார் . இந்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் தயாரித்து உள்ளார் . இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி , இயக்குனர் பொன்ராம் ஆகியோர் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடி இருந்தனர் . தற்போது டி.எஸ்.பி படம் நெட்பிளிக்ஸ் ஒ.டி.டி தளத்தில் டிசம்பர் 30 -ஆம் தேதி வெளியாக உள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus