சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 14 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இன்று (ஜனவரி 16-ஆம் தேதி) நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
‘காந்தி டாக்ஸ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படம் ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் உருவாக உள்ளதாம். இப்படத்தை பிரபல மராத்தி பட இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்க உள்ளார். இதனை ‘மூவி மில் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.